தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து

sbllPOijgdhcg

தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். சென்னையில் தமிழ் சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவர்னர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்க விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால் விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செய்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தளத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Leave a Response