லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை : கால்நடைத் தீவன ஊழல்..

lalu-convicted-1515597592

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் மொத்தம் 76 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. விசாரணை நடந்த காலத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 3 பேர் அரசுத் தரப்புசாட்சிகளாக மாறினர். இருவருக்கு ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். மீதமுள்ள 56 பேரில் இரு அரசு ஊழியர்கள் மற்றும் 4 கால்நடைத் தீவன வியாபாரிகள் என மொத்தம் 6 பேர் வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் தண்டனை தொடர்பான வாதங்கள் நடைபெற்றது. இந்த வாதம் முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Leave a Response