அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான தினசரி படிக்காசு குறைப்பு

tn bus staff

டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்டவையால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு வழங்கப்படும் படிக்காசை தமிழக போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது. பொதுவாக டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு அவர்கள் வசூலிக்கும் தொகையில் ரூ.1000-க்கு 1.85 சதவீதம் என்ற அடிப்படையில் தினமும் படிக்காசு ரூ.16 வழங்கப்படும்.

இது ஊதியமில்லாமல் கிடைக்கும் எக்ஸ்ட்ர தொகையாகும். இந்நிலையில் தற்போது பேருந்து கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியதை போல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பேருந்து காசையும் போக்குவரத்து கழகம் குறைத்துள்ளது.

இனி படிக்காசு தினந்தோறும் ரூ. 1000-க்கு ரூ. 10.80 பைசா மட்டுமே வழங்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Leave a Response