தமிழகத்தில் விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி- டிராபிக் ராமசாமி

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் பாதுகாப்பு கழகத்தின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா, ஐம்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் சின்னம் கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக நம்பர் அல்லது பெயர் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

trafic ramaswamy

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. இந்த ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு மக்கள் தயாராகிவிட்டனர். தமிழகத்தில் விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரும். ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் வரலாம்.

சட்டப்பேரவைத் தலைவர் தனபால், 18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்தது செல்லாதது. அவசரத்தில் அவர் பதவி நீக்கம் செய்து விட்டார்.

ரஜினி , கமல் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு சரிவர மாட்டார்கள். நடிகர்களிடம் மக்கள் ரசிகர்களாகதான் இருப்பார்கள்; ஓட்டு போட மாட்டார்கள். காவலர்கள் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை 8 மணி நேரம்தான் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார் ராமசாமி

Leave a Response