பாதுகாவலருக்கு, ‘பளார்’:

ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரசாரக் கூட்டத்தில் தன் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்கு, உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சர்தார்பூர் நகரில், சிவ்ராஜ் சிங் சவுகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கு, ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய, சிவ்ராஜ் சிங் சவுகான், தன் பாதுகாவலரை கோபமாக கன்னத்தில் அறைந்தார்; பின், அவரை அங்கிருந்து போகும்படி தள்ளி விட்டார். சிவ்ராஜ் சிங் சவுகான், தன் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த வீடியோ,

mp

சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு, காங்., கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, காங்., செய்தித் தொடர்பாளர், பங்கஜ் சதுர்வேதி, ‘டுவிட்டரில்’ கூறியதாவது: பாதுகாவல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு போலீஸ்காரரை, முதல்வர் சவுகான் அறைந்துள்ளார். போலீஸ்காரரை, கடமையை செய்ய விடாமல் அடித்துள்ள முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யாதது ஏன்? உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவ நேரிடும் என்ற விரக்தியில், பாதுகாவலர் கன்னத்தில், சிவ்ராஜ் சிங் சவுகான் அறைந்துள்ளார்.

Leave a Response