பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல இயக்குநராக எம்.வி.வி.எஸ்.மூர்த்தி பொறுப்பேற்பு

17CHRGNMURTHY

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குநராக எம்.வி.வி.எஸ். மூர்த்தி நேற்று பொறுப்பேற்றார்.

இதுவரை தலைமை இயக்குநராக பதவி வகித்த கே.முத்துகுமார் மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்திய தகவல் பணியில் 1984-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இவர், சென்னைக்கு வரும்முன் புதுதில்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் அகில இந்திய வானொலி, விளம்பரம் மற்றும் காட்சி இயக்குநரகம், களவிளம்பர இயக்குநரகம், பத்திரிகை தகவல் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு ஊடகங்களில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

Leave a Response