இருமுடி கட்டி சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நாள்தோறும் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர்.

மகர ஜோதியை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பொன்னம்பல மேட்டில் 3 முறை தெரிந்த மகரஜோதியை சரண கோஷங்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திரைப்பட பாடகி சித்ரா முதல் முறையாக ஐயப்பனை நேற்று முன்தினம் தரிசனம் செய்தார். இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு வந்த பாடகி சித்ராவை தேவசம் போர்டு அதிகாரிகள் வரவேற்றனர்.

chitra

தேவசம்போர்டு சார்பில் ஹரிவராசனம் விருது சித்ராவுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் நடிகர் ஜெயராமும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்தார்.

Leave a Response