தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பேய்ப்படம்! ‘பலூன்’ சினிமா விமர்சனம்…

Balloon-Movie (1)
படத்த பார்த்துட்டு ‘இது அந்த ஹாலிவுட் படத்துலேருந்து சுட்ட கதை’, ‘இந்த படத்துலேருந்து உருவின கதை’ன்னு சொல்வோம்ல. அதுக்கெல்லாம் வாய்ப்பு தராம இந்தந்த படங்களோட தாக்கம்தான் இந்த படம் உருவாகுறதுக்கு காரணம்னு டைட்டில்ல டைரக்டரே சொல்லிடுறாரு!

“அடடே, அப்போ கதை செமயா இருக்கும்”னு நினைப்பீங்களே!

கதைய நாலுவரி சொல்லிடுறோம். அது செமயா இருக்கா, மொக்கையானு நீங்களே தீர்மானிச்சுக்குங்க.

ஜெய்க்கு சினிமா டைரக்டரா ஆகணும்கிறது ஆசை. அதுக்காக நல்லதா ஒரு கதை ரெடி பண்ணிக்கிட்டு புரொடியூசர்கிட்டே போறாரு. புரொடியூசரோ, “இது நல்ல கதைதான். ஆனா, இதை படமா எடுத்தா ரிலீஸ் பண்ண விட மாட்டானுங்க. நீ போய் நல்ல பேய்க்கதையா பிடிச்சுக்கிட்டு வா”னு சொல்றாரு.

சரின்னு ஒத்துக்கிற ஜெய், தன்னோட மனைவி அஞ்சலி, அண்ணனோட வாலுப் புள்ள பப்பு, அஸிஸ்டண்ட் டைரக்டர் யோகிபாபு, கார்த்திக் யோகினு டீமா கிளம்பி ஊட்டிக்கு போயி ஒரு வீட்ல தங்குறாங்க.

போன இடத்துல ஜெய்யோட அண்ணன் மகன் உடம்புல ஒரு பேய் வந்து உக்காந்துக்கிட்டு ரகள பண்ணுது. இது எந்த பேயின்னு ஆராய்ச்சி பண்றதுக்குள்ள ஜெய்யோட மனைவி அஞ்சலிக்கும் பேய் பிடிக்குது. ஒரு வீட்ல ஒருத்தருக்கு பேய் பிடிச்சாலே ஸ்கிரீன்பிளே ரணகளமா இருக்கும். இதுல ரெண்டு பேருக்கு பேய் பிடிக்குது.

ஹைலைட் என்ன தெரியுமா? ஒரு கட்டத்துல ஜெய்க்குமே பேய் பிடிக்குது!

இப்படி எல்லாரையும் பிடிச்சு ஆட்டிப் படைக்கிற பேயோட வரலாறு, பூகோளம், சயின்ஸு இதெல்லாம் என்னங்கிறதுதான் பலூனோட கதை!

ஜெய்யோட நடிப்பு எப்டிருக்கும்னு நமக்கெல்லாம் சொல்லவே தேவயில்ல. அதே, டெம்ப்ளேட் நடிப்புதான். பலூன் வியாபாரி கெட்டப்ல வர்றப்போ மட்டும் வழக்கத்தவிட கொஞ்சம் தூக்கலா நடிச்சிருக்காரு.

ஜெய்க்கு பொண்டாட்டி அஞ்சலி. அஞ்சலிங்கிறதாலேயே என்னவோ ஊட்டி குளிருக்கு இதமா ரொமான்ஸ்ல கொஞ்சம் இறங்கி வெளாடிருக்காரு மனுசன்!

அஞ்சலி ஓரளவுக்கு சொல்லிக்கிற மாதிரியான நல்ல நடிகை. அதை இந்த படத்துலயும் நிரூபிச்சிருக்காங்க. பப்பாளிக் காய தோல் சீவினா மாதிரி இருக்குற அஞ்சலி ஜெய்கூட கொஞ்சிக் கொஞ்சு குலாவுற விஷயத்துல கெமிஸ்ட்ரி செமயா ஒர்க் அவுட் ஆகிருக்கு!

ஜெய்க்கு அண்ணன் மகனா வர்ற அந்த பொடியன் படம் முழுக்க கலக்கிருக்கான்!

மூக்குமுட்ட குடிச்சுட்டு கக்கா போறதுக்கு டாய்லெட் தேடிக்கிட்டே திரியற மாதிரி ஒரு கேரக்டர் யோகி பாபுவுக்கு. மனுஷன் அதைக்கூட தன்னோட பிரமாதமான டயலாக் டெலிவரியால பிரமாதப் படுத்திருக்கார்!

ஜனனி ஐயருக்கு நடிக்க பெருசா வாய்ப்பில்ல. செகன்ட் ஹீரோயினா வந்து கொடுத்த வேலய கச்சிதமா செஞ்சுட்டு போறாங்க. அவ்ளோதான்!

சுப்பு பஞ்சு, நாகி நீடு, ராம்ஸ், ‘சங்கு சக்கரம்’ படத்துல அசத்துன பேபி மோனிகானு நிறைய நல்ல நடிகர், நடிகைகள்… பத்திரிகையாளர் செந்தில்குமரனும் ஒரு சீன்ல பளீர்னு அட்டனன்ஸ் போட்டுட்டு போறார்!

மியூஸிக் யுவன் சங்கர்ராஜா. பேய்ப்படத்துக்கு என்ன மாதிரியான ஆர் ஆர் போட்டா கெத்தா இருக்குமோ அப்டி போட்டிருக்காப்ல! பேய்ப்படத்துல பாட்டுக்கெல்லாம் பெருசா அவசியமிருக்காதி. இருந்தாலும் ஒண்ணு ரெண்டு பாட்டு அப்பப்போ எட்டிப் பாக்குது!

நல்ல சினிமா எடுத்தா அதை ரிலீஸ் பண்ண விடாம, எனக்கு போட்டுக் காட்டு, எனக்கு போட்டுக் காட்டுனு சிலபேரு கொடுக்குற குடைச்சல எடுத்துக் காட்டுற சீன்லாம் ரொம்ப நல்லாருக்கு!

பாத்துப் பாத்து சலிச்சுப் போன வழக்கமான பேய்க் கதைதான் அதை கொஞ்சமாச்சும் சுவாரஸ்யமா கொடுத்துடணும்னு டைரக்டர் சினிஷ் முயற்சி பண்ணிருக்கார். ரிசல்ட் என்னவோ பிரியாணிக்கு டிரை பண்ணி பிரிஞ்சி சமச்ச மாதிரி வந்திருக்கு!

Leave a Response