இது வழக்கமான பேய்ப்படமில்ல! ‘சங்குசக்கரம்’ சினிமா விமர்சனம்…

IMG-20171227-WA0000
வருசத்துக்கு 200 படம் வந்தா அதுல எழுவது எம்பது படம் பேய்ப் படமாத்தான் இருக்கு. ‘சங்கு சக்கரமும் பேய்ப்படம்தான்.

ஆனா, இது வழக்கமான பேய்ப்படமில்ல.

ஏகப்பட்ட வாண்டுங்க போட்டி போட்டு நடிச்சிருக்குற,

நம்ம வீட்டுக் குட்டிச் சுட்டீஸுங்க பாத்து என்ஜாய் பண்ற மாதிரியான பேய்ப்படம்!

ஒரு பெரிய பங்களா. அதுல ஒரு டஜன் வாண்டுங்களைஅடைச்சுப் போட்டு அவங்களைத் தீர்த்துக் கட்ட சதி நடக்குது.

அதுக்கிடைல அந்த பங்களால ஒரு குழந்தை பேயா திரியுது. அந்த பேய் இந்த வாண்டுகளை ஆபத்துலேருந்து காப்பாத்த போராடுது. போராட்டத்தோட முடிவு என்னங்கிறதுதான் ஸ்கிரீன் பிளே!

பேயா வர்ற குழந்தை மோனிகாலேருந்து அத்தனை குட்டிச் சுட்டீஸும் பெர்பாமன்ஸுல அசத்தியிருக்குதுங்க! அந்த பசங்க எல்லாருக்கும் பெரிய பாராட்டைச் சொல்லணும்!

இந்த படத்துல ஆர்ஜே கீதாவும் பேயா நடிச்சிருக்காங்க. நல்லா நடிச்சிருக்காங்க!

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் ஆகாயம்கிற கேரக்டர்ல பின்னிருக்காப்ல! அதேபோல மத்த எல்லா கேரக்டருமே கதையோட செமயா மிங்கிளாகிருக்காங்க!

ஷபீரோட ஆர்.ஆர். படத்துக்கு பெரிய பலமா அமைஞ்சிருக்கு!

படம் முழுக்க ஒரே பங்களாலதான் நடக்குதுன்னாலும் சலிப்பு வராதபடி ஒளிப்பதிவு பண்ணிருக்கார் ரவிகண்ணன்!

பிளாஷ்பேக்’கே கிடையாதுங்கிறது இந்த படத்தோட ஸ்பெஷல்!

இன்டர்வல் வரை கொஞ்சம் ஸ்லோவா போற படம் இன்டர்வலுக்கு அப்புறம் செமயா பிக் அப் ஆகுது!

குழந்தைங்களை நடிக்க வெச்சு, குழந்தைங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பேய்ப்படத்த எடுத்திருக்குற டைரக்டர் மாரீசனை எவ்ளோ வேணாலும் பாராட்டலாம்!

Leave a Response