- பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசைநிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிறகேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொது மக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தை பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதி முறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
2.தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 19-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
3.வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது.
4.இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியமுறை கேடான செயலாகும். 19-ந் தேதி மாலை 5 மணி முதல் 21-ந் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், கருத்துக்கணிப்புக்களை நடத்துவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது…

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 19-ந் தேதி இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் பிரசாரம் முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான யாதொரு பிரசார பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

