முன்னாள் முதல்வருக்கு மூன்று ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு!

Madhu_Koda_05299_12137

நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில்,  முன்னாள் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி.குப்தா உட்பட நான்குபேர் குற்றவாளிகள் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இவர்களின் தண்டனைகுறித்த விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த மதுகோடா தனது பதவிக்காலத்தில் தன் செல்வாக்கால் மாநிலத்தின் பல நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார். இதனால், மதுகோடாமீது கடுமையான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை வழக்காக எடுத்த சி.பி.ஐ, மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே.பாசு, நிலக்கரித்துறைச் செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு தொடர்ந்தது.

122675-646417-madhu-koda

இந்த வழக்கின் மீதான விசாரணை பல ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட ஆறு பேரை குற்றவாளிகள் என அறிவித்த சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு, இன்று மதுகோடா உள்ளிட்ட ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மதுகோடாவுக்கு கூடுதலாக 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தற்போது உயர் நீதிமன்றத்தில் மதுகோடா உள்ளிடவர்கள் மேல்முறையீடு செய்துகொள்வதற்காகச் சி.பி.ஐ நீதிமன்றம் இரண்டு மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

Leave a Response