கடலூரில் கீற்று மறைப்பில் இளம்பெண் குளித்ததை ஆளுநர் பார்த்ததாக பகீர் புகார்- ஊர்மக்கள் சுற்றிவளைப்பு!

x15-1513337202-banwarilal-purohit3455.jpg.pagespeed.ic.rO2iQOE9QX

 

கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார்.

 

x15-1513340859-dmk-protest3345.jpg.pagespeed.ic.-4jviicYPC

கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். கடலூரில் ஆய்வு எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்.

 

 

அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். போலீஸார் குழப்பம் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

Leave a Response