முரசொலி அலுவலகத்தைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி திடீர் விசிட்- தொண்டர்கள் மகிழ்ச்சி!

x15-1513356686-karunanidhi45.jpg.pagespeed.ic.KhwcjcK9IW

 

ஓராண்டு காலத்துக்கு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று இரவு வருகை தந்தார். இதனால் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஓராண்டு காலமாக உடல்நிலை சரியில்லை. இதனால் கட்சி பணிகளில் நேரடியாக ஈடுபடுவது, அண்ணா அறிவாலயத்துக்கு செல்வது, முரசொலி அலுவலகம் செல்வது, பொது விழாக்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் அண்மையில் முரசொலி பவள விழாவிலும் கூட அவர் கலந்து கொள்ள மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. தற்போது அவரது உடல்நலம் சற்று தேறி வருகிறது. கண்காட்சி அரங்கு இதையடுத்து முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி சென்றிருந்தார். அங்கு முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.

x15-1513356703-karunanidhi765.jpg.pagespeed.ic.pe83aBXxB7

இதையடுத்து கடந்த மாதம் சென்னை தினத்தந்தி பவள விழாவுக்கு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், மோடி புறப்பட்டதும் வாசல் வரை கருணாநிதியை உறவினர்கள் அழைத்து வந்தனர்.

அப்போது அங்கிருந்த தொண்டர்களை பார்த்து புன்னகையிட்ட கருணாநிதி அவர்களை பார்த்து கையசைத்தார். கடந்த சில நாட்களாகவே கருணாநிதி, அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்தன.

x15-1513356670-karunanidhi42.jpg.pagespeed.ic.YKI_IiIPod

கருணாநிதி அமருவதற்காக அவரது அறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று இரவு அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி வருகை தந்தார். ஆர்.கே.நகர் தேர்தல் களத்துக்கும்…

அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு வீடு திரும்பினார். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களத்துக்கும் கருணாநிதி அழைத்து வரப்பட இருக்கிறார்.

Leave a Response