இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.5 ஆக பதிவு- சுனாமி அச்சம்!

 

indonesia-16-1513373075 (1)

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கமாது 20 வினாடிகள் நீடித்தது. இந்நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டதாக கூறப்படுகிறது..

 

இதனால் மக்களிடையே சுனாமி அச்சமும் எழுந்தது. உலகையே உறைய வைத்த 2004-ம் ஆண்டு சுனாமி கொடூரமும் இதே டிசம்பர் மாதமும் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response