ஒரு ஹீரோயின் கூட சேர்ந்து நடிச்சாலே சண்டை வரும் – நாகராஜ சோழன் நாயகி “மிருதுளா முரளி”!!

மிருதுளா  முரளி, நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ (அமைதிப்படை பார்ட்-2) வில் இளமை ததும்ப வரும் இன்னொரு கேரளத்து வரவு. சின்ன வயதிலிருந்தே சின்ன திரைப் பிரவேசம். கேரளத்து பிரபல சேனலில் வாயாடத் தொடங்கியவர். கேரளத்தில் நடைபெறும் மாநில அளவிலான நடனம், நடிப்பு என பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர்களை வருடம்தோறும் தேர்வு செய்து கலாதிலகம் பட்டம் வழங்குவார்கள். அப்போட்டிகளில் தொடர்ந்து மூன்று வருடங்கள் கலாதிலகம் பட்டத்தை தட்டிச் சென்றவர். அவரை பற்றி நமக்கு தெரியாத தகவல்களை பற்றி அவரே நம்முடன் நடந்த உரையாடலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சில இதோ:

தம்பி மிதுன் முரளி முதலில் குழந்தை நட்சத்திரமா நடித்து வந்தான். அதன் மூலம் சினிமா தொடர்பு.  ஷாஜி கைலாஷ் சார் படத்தில் மோகன்லால் கூட ரெட் சில்லீஸ் என்ற படத்தில் அறிமுகம். அடுத்தது லால் ஜோஷ் சாரின் இயக்கத்தில் ‘எல்சம்மா என்ன ஆண்குட்டி’ என்ற படம். மூணாவதா 10.30 லோக்கல் கால் என்ற படத்தில் நடித்து வருகிறேன். அப்போ தான் மணிவண்ணன் சாரின் அமைதிப்படை படத்தின் வாய்ப்பு ஒரு கோ-ஆர்டினேட்டர் மூலமா கிடைச்சது.

அப்போவெல்லாம் அமைதிப்படை அவ்வளவு பெரிய ஹிட் என தெரியாது. தமிழில் அறிமுகமாகவேண்டும் என்பதற்காக ஒப்புக்கொண்டேன். அமைதிப்படை முதல் பாகத்தை ஷூட்டிங் முடிஞ்சு இப்போதான் வீட்டில் உக்கார்ந்து பார்த்தேன். பார்த்தால் மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் ரகு மணிவண்ணனின் ஜோடியாக வருகிறேன்.  படம் ரிலீஸ் ஆகியிருக்கு.  பதட்டமா இருக்கு.

தமிழ் இவ்வளவு சரளமா வரக்காரணம் ஒரு வருஷமா சென்னை எம்.ஒ.பி வைஷ்ணவா காலேஜில் ப்ராட்காஸ்ட் கம்யூனிகேசன் படித்து வருகிறேன். காமெராவுக்கு முன்னாடி வந்தாச்சு. அதனால கமெராவுக்கு பின்னாடி என்ன உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்த படிப்பு. அதுக்காக இயக்குகிறார். இயக்க ஆசை என்றெல்லாம் பரப்பி விட்டு வேடிக்கை பார்க்கவேண்டாம் ப்ளீஸ். ஏன்னா நடிப்பு நமக்கு சால இஷ்டம்.

ஒரு ஹீரோயின் கூட நடிச்சாலே சண்டை வரும்பாங்க. நாங்க நான்கு பேர். கோமல், வர்ஷா கூடவும் மட்டுமே எனக்கு காம்பினேசன் இருந்தது. அன்சிபா கூட இல்லை. எல்லோரிடமும் அன்பா பழகிட்டேன். இன்றும் இனிமேயும்  மல்ட்டி ஸ்டார் காஸ்டிங் தவிர்க்க முடியாது. நமக்கு கிடைக்கிற இடத்தில் விளையாடிப்பார்க்கனும்.

ஹீரோயின்களில் பாவனா ரொம்ப க்ளோஸ். என்னோட சின்ன வயசிலேர்ந்து அவங்களை தெரியும். ரொம்ப நைஸ் கேரெக்டர். பாவனாவுக்கு பேய் என்றாலே பயம் இருட்டுல போட்டோ கூட பார்க்கமாட்டாங்க. தனியா இருக்கமாட்டாங்க. எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ். சத்யராஜ் சார், மணிவண்ணன் சார் ரொம்ப உதவியா இருந்தாங்க. இல்லன்னா   பெரிய வசனங்களை பேசி நடித்திருக்க முடியாது.