அத்துமீறி கட்டியுள்ள கட்டிடம் இடிக்கப்படுவதை தடுக்கும் தனியார் நிறுவனம்!

b2f2c058-f756-4c57-adc5-94df04e5951c

 

சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் கூவம் நதி கரையில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் இடிக்கப்பட்டது. பின்னர் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு அதே இடத்தில் சரவணா ஏஜென்ஸிஸ் என்ற நிறுவனம் அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கையில் போட்டுகொண்டு மீண்டும் அங்கு கட்டிடங்கள் கட்டி வணிகம் செய்து வருகிறது. பல புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் சரவணா ஏஜென்சீஸ் நிறுவனம் நீதி மன்றம் சென்று வழக்கு தொடர்ந்தது.

 

தற்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இப்போது மாநகராட்சி பணியாளர்கள் அந்த அத்து மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க தங்கள் வந்துள்ளனர்.  சென்னை மாநகராட்சியின் இந்த இடிக்கும் முயர்ச்சியை தடுக்க சரவணா ஏஜென்சீஸ் உரிமையாளர், சில அரசியல் கட்சி உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு அத்து மீறி கட்டியுள்ள கட்டிடம் இடிக்கப்படுவதை தடுத்து வருகிறார். காவல்துறையினர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

196f5433-81db-42f7-9637-ea133fbee6e9

Leave a Response