பணத்திற்காக தாயை கொலை செய்த மகன் கைது!

16684199_1015449435122

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான்.
ஹாசினி உடலை அனகாபுத்தூர் அருகே ஒரு இடத்தில் வைத்து எரித்துவிட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார்.

WhatsApp-Image-2017-12-02-at-7.28.26-PM
கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்துசெய்து ஜாமினில் விடுவித்தது. இதை தொடர்ந்து, அந்த வீட்டை காலி செய்து குன்றத்தூருக்கு சென்ற தஷ்வந்த் அவரது பெற்றோர் சேகர்(65), சரளா (45) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே, ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த், குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தான். கடந்த வாரம் தாய் சரளாவை கொன்று விட்டு வீட்டில் இருந்த 25 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றான்.
தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

IMG_20171206_233313

தலைமறைவான தஷ்வந்தை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை சுற்றி வளைத்து தமிழக போலீசார் இன்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்:-

சிறுமி ஹாசினியை கற்பழித்து கொலை செய்தும், தாயை கொன்று நகைகளை திருடியும் சென்ற தஷ்வந்த் தலைமறைவாக இருந்து வந்தான். தஷ்வந்த மும்பையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மும்பைக்கு சென்ற நாங்கள் அங்கு தலைமறைவாக இருந்த தஷ்வந்தை சுற்றி வளைத்து கைது செய்தோம் என தெரிவித்தனர்.

Leave a Response