பாபர் மசூதி இடிப்பு- இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம்!


babrimasjid-demolishers2-06-1512577040

பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்குதூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திருச்சியில் விமான நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6-ந் தேதி நீதிமன்ற உத்தரவுகளை மீறி இடிக்கப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றைய தினம்வரை பாபர் மசூதியை இடித்தவர்கள் எந்த தண்டனைக்கும் உள்ளாக்கப்படவில்லை.

 bab_2_600_16388

மத்திய அரசு அமைத்த லிபரஹான் கமிஷன் 63 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டிய பின்னரும் அவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் செய்யவில்லை. நீதிமன்றமோ ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி விமான நிலையம் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.

babri_masjid_demolition_20050228
இந்த போராட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப்பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அபு ஃபைஸல், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோன்று சென்னை,மதுரை,கோவை ஆகிய இடங்களிலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது

 

Leave a Response