தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். தமிழகத்தில் சுற்றுசூழல் சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு ஜல்லியை தவிர கிரானைட் குவாரி உள்ளிட்ட பிற கனிம குவாரிகளை படிப்படியாக மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இயற்கை மணலை இறக்குமதி செய்ய ஏதுவாக தமிழக அரசு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி மகாதேவன் முன்னர் உத்தரவிட்டார்.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்ட இயற்கை மணலை, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என ராமையா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்ட செல்ல அனுமதி வழங்கி பிறப்பித்து மேற்கண்ட உத்தரவை வழங்கினார்.
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.