ஆர்.கே.நகர் வேண்டாம் தினகரனிடம் புலம்பும் நடராஜன்!

ttvnata

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க வேட்பாளரைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. இலையை மீட்பதற்காக இலையை எதிர்த்து நிற்கிறோம். கட்டாயம் போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டார் தினகரன்.

அவரது இந்த முடிவை மன்னார்குடி உறவுகள் விரும்பவில்லை. ஆனால் எனக்கு ஏராளமான இளைஞர் படை இருக்கிறது. ஏற்கெனவே வாக்குகளுக்குப் பணம் கொடுத்துள்ளோம். மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதை நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் நாம் பெறப் போகும் வாக்குகள் ஆளும்கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தும். நமது பின்னால் அ.தி.மு.க தொண்டர்கள் அணி திரளவும் ஒரு வாய்ப்பாக அமையும் எனப் பேசி வருகிறார் தினகரன்.

அவரது இந்தக் கருத்தை சசிகலாவின் கணவர் நடராஜன் ஏற்கவில்லை. இதுகுறித்து குடும்பத்து உறவுகளிடம் பேசிய நடராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் போட்டியிடாமல் இருப்பதே நல்லது. டெல்லியில் இருந்து நமக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். நமது குடும்பத்தைக் குறிவைத்து ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

Income-Tax-department

வருமான வரித்துறையின் மூலம் பொருளாதார குற்ற வழக்குகளைப் போட்டுவிட்டு, அதை கிரிமினல் வழக்குகளாக மாற்றவும் முயற்சி செய்வார்கள். ஆர்.கே.நகரில் நாம் போட்டியிட்டால், இந்த வழக்குகள் நமது கழுத்தை நெரிக்கத் தொடங்கிவிடும். ஜெயலலிதா எதிர்க்கட்சியாக இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த காலகட்டங்களும் உண்டு. பென்னாரகத்தில் ஏற்பட்ட நிலையை அனைவருக்கும் தெரியும். ஆளும்கட்சியாக இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் அமைச்சர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

rk-nagar.jpg1

பிரதான போட்டி என்று பார்த்தால், தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில்தான். நம்மை நோக்கி வந்த காங்கிரஸ், வி.சி.க கட்சிகளும் தி.மு.க அணிக்குப் போய்விட்டன. நாம் தனியாக இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தால் நாம் போட்டியிடலாம். மாநிலம் முழுவதும் பரவலாக நமக்கு உள்ள பலத்தை முன்வைத்துக் களமிறங்குவோம்.

ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருந்தால், எந்தவித வருமான வரித்துறை சோதனையும் நடக்காது. அதைத்தான் டெல்லியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். நமக்கான நேரம் வரும்போது பார்த்துக் கொள்வோம் என விவரித்திருக்கிறார். இதை தினகரன் கேட்பதாகவும் இல்லையாம்.

Leave a Response