மணி முத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு!

1487248361-6013

பிசான பருவ சாகுபடிக்காக மணி முத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பிசான பருவ சாகுபடிக்காக நெல்லை மணிமுத்தாறு அணையில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் 2018 மார்ச் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

330.05 மில்லியன் கனஅடிக்கு மிகாமர் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 2757 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து நீர் திறக்க முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண்மையை பெருக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

Leave a Response