தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை.. சென்னையில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு!

 

 

201711061357475352_Srilanka-near-New-air-pressure-level-heavy-rain_SECVPF

தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் சராசரியை விட அதிகளவு மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் கூறியதைப் போலவே அதிரடி காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது.

 

25-1511604612-rain-chennai4343

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.

 

இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இந்திய கடலோர பகுதியை நெருங்குவதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

5a01405ed6ab2-IBCTAMIL

தற்போது கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் அந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளதாகவும் ஸ்கைமெட் வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் நகரும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இதனால் சென்னையில் இன்று முதல் மழை தொடங்கும் என்றும் ஸ்கைமெட் தனியார் வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது. நாளை முதல் 28ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் அந்த தனியார் வெதர் அமைப்பு கூறியுள்ளது. டிசம்பர் 4 வரை நீடிக்கும் இந்த மூன்று சென்னை புறநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னையில் லேசான மழை பெய்யும் என்றும் ஸ்கைமெட் வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Response