‘பத்மாவதி’ மத்தியப் பிரதேசத்தில் வெளியாகாது: சிவராஜ் சிங் சவுகான்

 _98793947_padma2

 

‘’ திரைப்படம் மத்தியப் பிரதேசத்தில் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படம் மத்தியப் பிரதேசத்தில் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

‘பத்மாவதி’ திரைப்படம் குறித்து இன்று (திங்கட்கிழமை) சிவராஜ் சிங் சவுகான், ராஜ்புத் சமூகத்தின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து சவுகான் பேசும்போது, ” ‘பத்மாவதி’ திரைப்படம் உண்மைகளை திரித்துக் கூறியுள்ளது. ராணி பத்மாவதியை அவமதிக்கும் வகையில் சித்தரித்துள்ளனர். இந்த அவமரியாதையை பொறுத்துக் கொள்ள முடியாது. தணிக்கைத் துறையினர் பத்மாவதிக்கு அனுமதி அளித்தாலும் ‘பத்மாவதி’ திரைப்படம் மத்தியப் பிரதேசத்தில் வெளியாகாது” என்றார்.

Leave a Response