ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்ற பாலா! சர்ச்சையை கிளப்பிய டீசர்!

C5vTJ67UYAAidDb_14300

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ பட டீசர் சற்றுமுன் வெளியானது.

 

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் ‘நாச்சியார்’ இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பாலாவின் பி ஸ்டியோஸ் நிறுவனத்துடன் இணைந்து 2டி எண்டெர்டைமண்ட் சார்பாக சூர்யா தயாரிக்கும் இந்தப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

படத்தின் டீசரில் முழுக்க ஜோதிகாவே வியாபித்திருக்கிறார். டீசரின் துவக்கத்தில் நெற்றியில் குங்குமப் பொட்டுடனும் , அதன்பின் கருப்பு உடையில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும் இருவேறு தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.

 

ஜி.வி பிரகாஷ் கிளிசேவான பாலா படத்தின் வழக்கமான கதாநாயகன் தோற்றத்தில் தான் டீசரில் இடம்பெற்றுள்ளார்.
இந்த டீசர் தற்போது இணையத்தில் மிகுந்த பரபரப்பையும் விமர்னத்தையும் உருவாக்கிவருகிறது. ஏனெனில் டீசர் இறுதியில் ஜோதிகா ஒரு பெண் சார்ந்த ஆபாச வார்த்தையை பேசியிருப்பதுதான் தற்போது சர்ச்சையை உள்ளாக்கியுள்ளது.

 
அதுவும் ஜோதிகா இதற்கு முன் பெண்கள் சார்ந்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் நடித்துவிட்டு தற்போது டீசரில் இப்படி ஒரு பெண்கள் சார்ந்த ஆபாச வார்த்தையை பீப் சவுண்ட் எதுவும் இல்லாமல் பேசியிருப்பது பலத்த விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
பாலா படங்கள் எல்லாமே இப்படி வன்முறை நிறைந்துதான் என்றாலும், டீசரிலேயே ஆபாசவார்த்தை இடம்பெறும் பாலாவின் முதல் பட டீசர் இதுவாகத்தான் இருக்கும் .

 
அதுமட்டுமின்றி உண்மையில் ஜோதிகா இந்த வசனத்தை அர்த்தம் தெரிந்துதான் பேசினாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
டீசரே இந்த லெவலில் இருக்கிறது என்றால் , இன்னும் டிரெய்லர் , படம் எப்படி இருக்குமோ?

 

Leave a Response