வரும் 2018-ன் விடுமுறை தினங்களை அறிவித்த தமிழக அரசு !

tn_government
மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் 2018-ம் ஆண்டுக்கான 23 அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் அறிக்கை படி, செலாவணி முறிச்சட்டத்தின் 25-ம் பிரிவின் கீழ், ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து, பின்வரும் நாட்கள் 2018-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும். இதில், ஏப்ரல் 1-ம் தேதி ஆண்டு வங்கி கணக்கு முடிவுக்கான விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், நான்கு விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 திங்களன்று வருவதால், இந்தாண்டு டிசம்பர் 30,31 உடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.

பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், முந்தைய சனிக்கிழமை ஜன.13-ம் தேதியுடன் சேர்த்து, 4 நாட்கள், மார்ச் 29, 30, 31, ஏப் 1 ஆகிய 4 நாட்கள், ஜூன் மாதம் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள், செப் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள், அக், 18, 19, 20, 21 ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறையாக வருகிறது.

Leave a Response