கிடுகிடுவென உயரும் அமராவதி அணை நீர்மட்டம் !

201706280103372281_Heavy-rain-Amaravathi-dam-water-level-is-3-feet-a-day_SECVPF

நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 90 அடி உயரம் கொண்ட அணையில், மழையின்றி கடந்த 2 வருடங்களாக நீர்மட்டம் மிக குறைவாக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கணிசமாக பெய்தததால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 88 அடியை நெருங்கியது. இதையடுத்து, விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை விடுத்தனர்.

 

இதை ஏற்று கடந்த மாதம் பிரதான கால்வாய் மற்றும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கியது.  இந்நிலையில், பாசனத்துக்கான நீர்திறப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த 5ம்தேதி நீர்மட்டம் 59.22 அடியாகவும், நீர்வரத்து 817 கனஅடியாகவும் இருந்தது. 6ம்தேதி 61.39 அடியாகவும், நீர்வரத்து 1571 கனஅடியாகவும் இருந்தது.
நேற்று நீர்வரத்து 1368 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 63.03 அடியாக உயர்ந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக 155 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

Leave a Response