வெண்ணிலா கபடி குழுவில் செய்த முயற்சி நெஞ்சில் துணிவிருந்தாலின் மூலம் நிறைவேறியது சந்தீப் கிஷன் பெருமிதம்!

nenchil
மாவீரன் கிட்டு படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த்,மெஹ்ரீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றி நாயகன் சந்தீப் கிஷன் பேசியது :-

நான் நடித்த “மாநகரம்” படம் வெளியான பின் அந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கும். அந்த அடையாளமாக எனக்கு இருப்பது நான் தரமான படங்களில் நடிப்பதுதான். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவர் இயக்கிய “வெண்ணிலா கபடி குழு” படத்தில் நடிக்க முயற்சித்தேன் ஆனால் சில காரணங்களால் எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. இப்போது “நெஞ்சில் துணிவிருந்தால்” திரைப்படத்தின் மூலம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து நாங்கள் இணைந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் நான் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். குமார் என்ற கதாபாத்திரம் தான் இந்த படத்தில் ஹீரோ. விக்ராந்த் பாண்டிய நாடு படத்தை விட இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கும் இந்த திரைப்படம் கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். நானும் மெஹ்ரீனும் இனைந்து நடித்துள்ள காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

நான் நடித்த மாநகரம் திரைப்படத்தில் இருந்து இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். நான் படத்தை பார்த்துவிட்டேன் படம் சிறப்பாக வந்துள்ளது. என்னுடைய கதாபாத்திரமும் நிச்சயம் மக்களிடம் எனக்கு மீண்டும் நல்ல பெயர் வாங்கி தரும். இந்த படத்திலும் இயக்குநர் சுசீந்திரனின் பாணியில் சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்து ஒன்றை சொல்லியுள்ளோம் அது கண்டிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும் என்றார் சந்தீப் கிஷன்.

Leave a Response