உறுதிகொள்- விமர்சனம்..

uruthi
பசங்க படத்தில் நடித்த கிஷோர் நடித்திருக்கும் படம்தான் இந்த “உறுதிகொள்”. இந்த படத்துல 12ம் வகுப்பு படிக்கும் மாணவனாக நடித்திருக்கும் கிஷோர். படிப்பில் மிகவும் மக்கான மாணவனாகவும், சேட்டை செய்வதில் கில்லாடியாகவும் இருக்கிறார். இதனால், அப்பாகிட்டையும் அவனோட ஸ்கூல் டீச்சர் கிட்டயும் அடிக்கடி அடிவாங்குகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவியான மேகனாவை காதலிக்கிறார்.
uruthikol-kishore-meghana3
இந்த காதல் கைகூட 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற கிஷோர், பொது தேர்வில் பிட் அடிச்சு மாட்டி கொள்கிறார். இதனால், அவரோட அப்பா வீட்டை விட்டு துரத்துராறு, வீட்ட விட்டு துரத்துன ஒடனே பசங்களோட சேர்ந்து குடிக்கற்து கோலி விளையாட்றதுனு ஊர சுத்திட்டு இருக்க கிஷோர் திடிர்னு ஒரு அடிதடி கேசுல ஜெயிலுக்கு போயிட்டு வறுகிறார். அப்போது அவங்க ஊரில் நடக்கும் கோயில் திருவிழா கிஷோரின் காதலி மேக்னா, தங்கச்சி உட்பட சில மாணவிகள் காணாமல் போயிடுறாங்க! அவங்களை கிஷோர் தேடும்போது பல அதிர்ச்சியான சம்பவங்கள் வெளியாகுது! அது என்ன? கிஷோரால் அவரகளை கண்டு பிடிக்க முடிஞ்சிதா? இல்லைய என்பது தான் இந்த ‘உறுதிகொள்’ படத்தின் கதை.

பள்ளி மாணவனாக நடித்திருக்கும் கிஷோர் நடிப்பு இந்த படத்தில் மிக சிறப்பு. முந்தைய படங்களை விட நடிப்பில் முதிர்ச்சி. இதில் வரும் சண்டைக் காட்சிகளில் அதிக மெனக்கெட்டு நடித்திருக்கிறார். இவருக்கு நண்பனாக வரும் ‘சூப்பர் சிங்கர்ஸ்’ நிகழ்ச்சி புகழ் அகிலேஷ் மற்றும் கை தென்னவன், நடிப்பில் அசத்தியிருப்பதோடு, காமெடியிலும் கலக்கியிருக்கிறார்கள். கதாநாயகியாக வரும் மேகனா, இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சில சீன்ல வந்தாலும், காளி வெங்கட் வரும் அத்தனை சீன்லையும் திரையரங்கமே சிரிப்பில் அதிர்கிறது.

படிக்கின்ற வயதில் படிக்கவில்லை என்றால் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அய்யனார். மேலும், டூரிஸ்ட் தளங்களில் உள்ள மறைவான பகுதிகளில், தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிப்பதோடு, பெண்களை கற்பழிக்கும் சமூக விரோத கும்பல் பற்றியும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அய்யனார். பள்ளி பருவத்தில் காதலிப்பது என்பது சற்று உறுத்தலாக இருந்தாலும், அதை இயக்குனர் காமெடியாக கையாண்டுள்ளது இப்படத்தின் சிறப்பு. திரைக்கதையின் முதல் பாதியில் ஓரளவிற்கு ரசிக்கிற மாதிரி இருந்தாலும், இரண்டாவது பாதியில கொஞ்சம் தொய்வு தான் இருக்கிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பாண்டி அருணாச்சலம் செஞ்சி கோட்டை மற்றும் அதன் சுற்றுபுரங்களை சிறப்பாக படமாக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். இன்னும் ஜுட் வினிகரின் இசை கதைக்கு ஏத்த மாதிரித்தான் இருக்கு.

மொத்தத்தில் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் படமாகத்தன் இருக்கிறது இந்த “உறுதிகொள்” படம்.

Leave a Response