நேற்று இரவு பெய்த மழை- சிக்கிய மேற்கு தாம்பரம்!

thamparam

நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் தாம்பரத்தில் உள்ள பீர்க்கன்கரணை ஏரியிலிருந்து நீர் வெளியேறியது. ஏரியிலிருந்து வெளியேறிய நீரால் மேற்கு தாம்பரம், முடிச்சூர், லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

rani tamparam

மேலும், வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்ற அறிவிப்பால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Leave a Response