தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்: கந்துவட்டி விழிப்புணர்வு குழு அமைக்கப்படுமா?

Madurai-high-court-4

மதுரை, ஐராவதநல்லூரை சேர்ந்த கனகவேல் பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் நடக்கும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி, தங்கள் இரு குழந்தைகளுடன் தற்கொலை ெசய்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில்தான் தமிழக அரசால் கந்துவட்டி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கவும், அதிக வட்டிக்கு பணம் வாங்காமல், அரசு வங்கிகளில் கடன் வாங்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிக வட்டி வசூலிப்ேபார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம். வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  மனுவிற்கு தமிழக தலைமை செயலாளர், நிதித்துறை செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Response