சிம்பிளாக நடக்கும் “தீரன் ஆதிகிராம் ஒன்று” இசை வெளியீட்டு விழா!

theeran
நடிகர் கார்த்தி நடிக்கும் “தீரன் ஆதிகிராம் ஒன்று” படத்தின் டீஸர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் ட்ராக் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மிக சிறப்பாக பெரிய அளவில் நாளை (நவம்பர் 2) வெளியாகும் என இந்த படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால், சென்னை நகரத்தில் கன மழை பொழிவதால் இந்த ஆடியோ வெளியீட்டை தங்களது அலுவலகத்தில் சிம்பிளாக நடத்துவதாக
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்க, நாயகியாக ராகுல் பரீத் சிங்க நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து, நவம்பர் 17 ம் தேதி வெளியீடுக்கு தயாராக உள்ளது.

Leave a Response