தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலையேற்றம் இன்று முதல் அமல்!!

sugar12._L_styvpf
தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை ரூ.13.50 லிருந்து ரூ.25 க்கு தமிழக அரசு உயர்த்தியது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விலையேற்றம் இரண்டு மடங்கு என்பது நடுத்தர மற்றும் சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு எதிர்க்கட்சிகளும் சர்க்கரை விலையேற்றத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ரேஷன் சர்க்கரை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் போது, அதிகாரிகள், பொதுமக்கள் இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் கடைகளில் உள்ள, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில், புதிய விலை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மிகவும் வறுமையில் உள்ள, ‘அந்தியோதயா’ ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை ரூ.13.50க்கு வழங்கப்படும்.

Leave a Response