மகளிர் ஆசிய ஹாக்கியில் இந்தியாவிடம் மிரண்டு போன மலேசியா !

gol
மகளிர் ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் குழு சுற்றின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா, குர்ஜித் கெளர் ஆகியோர் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுமே அசத்தலாக விளையாடிதில் மலேசியா தடுப்பாட்டம் ஆட, இந்தியா தனக்கான கோல் வாய்ப்புக்காக காத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது கால்மணி நேரத்தில் மலேசியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றவிடாமல் இந்தியாவின் ரஜனி எடிமர்பு தடுத்து கெத்து காட்டினார். அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தாலும், அதுவும் எதிரணியால் அசத்தலாக தடுக்கப்பட்டது.

இவ்வாறாக இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில், ஆட்டத்தின் முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்தது.

பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் இந்தியா அதிரடி ஆட்டத்தால் 54-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அணியின் வந்தனா கட்டாரியா அருமையாக ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

பின்னர் 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, இந்தியாவின் குர்ஜித் கெளர் அற்புதமான கோலாக மாற்றி இந்தியாவை பலப்படுத்தினார்.

இறுதிவரை மலேசிய அணிக்கு கோல் வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தியது.

Leave a Response