பத்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு- பள்ளி கல்லூரிகள் விடுமுறை!

dc-Cover

பருவமழை தொடங்கிய நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகத்தின் அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி உருவானது. அது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை தற்போது பெய்து வரும் பரவலான மழை மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

rain-in chennai

இந்நிலையில், 30-ஆம் தேதியான நேற்று திங்கள் அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் பள்ளிகளுக்கு விடப்படும் நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புமாறு சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து சென்னை, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை (அக்.31) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE_Clas

கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புறகரான தாம்பரம், சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி, செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
_getty_nocredit

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக தாழ்வான இடங்களில் நீர் தேங்கியது. நீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இந்த மழைக்கே சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave a Response