உ.பியை போல் மாறிய குஜராத்!

ahmedabad3

ஹமதாபாத் சிவில் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மற்றும் லுனாவாடா, சுரேந்திரநகர், மன்சா, விரம்கம், ஹிம்மத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ வசதி கிடைக்காத குழந்தைகளும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவை வெறும் 1.5 கிலோ மட்டுமே டை கொண்டவையாக இருந்துள்ளன. இவர்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை இருந்துள்ளது.

9 குழந்தைகள்  அடுத்தடுத்து மரணம்:-

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் சராசரி எடைக்கும் குறைவான அளவில் இருந்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிவில் மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தீவிரமான சுவாசப் பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ahmedabad1

விசாரணை ஆணையம் அமைப்பு:-

குஜராத் மாநில அரசால் நடத்தப்படும் மிக்பெரிய மருத்துவமனையில் நடைபெற்ற இந்த குழந்தைகள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவர், குழந்தையியல் நிபுணர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

congress

காங்கிரஸ் குற்றச்சாட்டு கெலாட் இரங்கல்:-

இதனிடையே தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் நடைபெற்ற இந்த குழந்தைகள் மரணத்தை பெரிதுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. முதல்வர் விஜய் ரூபானி அரசு மீதான இந்தக் கரும்புள்ளி குறித்து குஜராத் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ashok

குஜராத்தின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று ஒரே நாளில் மட்டும் தீவிர நோய் தொற்று காரணமாக 9 குழந்தைகள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Response