தணிக்கை குழுவால் மறுக்கப்பட்ட’ நீலம்’ திரைப்படம்! ஈழ தமிழர்களை இழிவுபடுத்துகிறதா சென்சார் போர்டு?

v2
இயக்குனர் வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் ஈழ தமிழர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்ட களம் , போராட்ட வாழ்க்கை முறையை பற்றி பேசும் ‘நீலம்’ என்ற படமொன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் தணிக்கை குழுவினருக்கு சமர்பிக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தரவும் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்திரைப்பட இயக்குனர் வெங்கடேஷ் கூறியிருப்பதாவது,
“நீலம் திரைப்படத்தின் முன்னோட்டம் தணிக்கை குழுவால் மறுக்கப்பட்டுள்ளது, இத்திரைப்படம் ஈழ தமிழர்களை பற்றி உள்ளதால் மற்றும் போராளிகளின் வாழக்கையை தழுவி எடுக்க பட்டதால் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள். இத்திரைப்படம் எனது 5 வருட உழைப்பு, இந்த முடிவு என்னை மிகவும் பாதித்துள்ளது. இது தமிழருக்காக எடுக்க பட்ட படம் .எனக்கு நீதி தேவை ” என கூறியிருக்கிறார்.

ஈழ தமிழர்களின் வாழ்வியலை பதிவு செய்வது என்ன தேசத்துரோக குற்றமா? ,”திரைப்படங்களை, திரைப்படங்ளாக பாருங்கள்” என நேற்றுதான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘மெர்சல் ‘ படம் தொடர்பான வழக்கில் சுட்டிகாட்டியிருந்தார்கள். இன்று மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் அரசாங்கங்களாலோ , தணிக்கை குழுவினராலோ வஞ்சிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

Leave a Response