புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் முதலிடம் பிடிக்க வருகிறது நோக்கியா மொபைல்!

nokia-105-main
நோக்கியா மொபைல்கள் மீண்டும் மார்க்கெட்டில் முதலிடம் பிடிக்க போட்டியைத் தொடங்கியுள்ளது. முதலில் நோக்கியா 3310 மாடலை மீண்டும் அறிமுகம் செய்து அசத்திய அந்நிறுவனம், வரிசையாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களையும் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

நோக்கியாவின் அடையாளமாக விளங்கும் பேசிக் மாடல் மொபைல்களில் அந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. புகழ்பெற்ற நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 ஆகிய பேசிக் மொபைல்கள் புதுப்பொலிவுடன் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

நோக்கியா 105 மாடலி திரையின் அளவு 1.8 இன்ச். இதன் பேட்டரி பேக் அப் 15 மணிநேரம். 500 மெசேஜ்கள் மற்றும் 2000 மொபைல் எண்களை ஸ்டோர் செய்து வைக்கும் திறன் கொண்டது. மேலும் எஃப்.எம். ரேடியோ வசதியும் உண்டு. ஸ்னேக் கேம், டூடுல் ஜம்ப், க்ராஸி ரோடு போன்ற கேம்களும் இருக்கின்றன. நோக்கியா 105 மாடல் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கடைகளில் மட்டுமே வாங்க முடியும்.

நோக்கியா 130 மாடலில் 32 ஜிபி வரை மெமரி கார்டு போடும் வசதி உண்டு. இதன் பேட்டரி பேக் அப் 44 மணிநேரம். எஃப்.எம் கேட்கவும், 11.5 மணி நேரம் வீடியோ பார்க்கவும் முடியும். இதில் கேமராவும் உண்டு. இதன் விலை இன்னும் அறிவிக்கபடவில்லை. இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் எனவும் அறிவிக்கபடவில்லை.

நோக்கியா 105 மாடல் மூன்று நிறங்களில் வெளியிட உள்ளது. நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் மட்டும். ஒரு சிம் மட்டும் போடும் வசதி கொண்ட நோக்கியா 105 மொபைல் ரூ.999க்கும் இரண்டு சிம் வசதி கொண்ட மொபைல் ரூ.1149க்கும் கிடைக்கும்.

Leave a Response