ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு – மும்பை இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

 

201710280542388238_Ranji-Trophy-match-between-Tamilnadu-and-Mumbai-ended-in-a_SECVPF

 

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) மும்பையில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களில் ஆட்டம் இழந்தது. மும்பை அணியின் பிரித்வி ஷா 123 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும், ஆதித்யா தாரே 53 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி பந்துவீச்சில் விஜய் சங்கர் 4 விக்கெட்களும், ரவிசந்திரன் அஷ்வின் 3 விக்கெட்களும், யோ மகேஷ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 450 ரன்கள் குவித்தது. தமிழக அணியில் பாபா இந்திரஜித் 152 ரன்களும், யோ மகேஷ் 103 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 69 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியின் விஜய் கோகில் 4 விக்கெட்களும், தவால் குல்கர்னி, ஆகாஷ் பர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
201710280542388238_1_ranji-trophy2._L_styvpf

3-வது நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 22 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய மும்பை அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இரண்டாவது இன்னிங்சில் அகில் ஹெர்வாத்கர் 132 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 138 ரன்களும் எடுத்தனர். தமிழக அணியின் ரஹில் ஷா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

தமிழக அணியின் பாபா இந்திரஜித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் டிரா செய்து புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழக அணி அடுத்த போட்டியில் வருகிற நவம்பர் 9-ம் தேதி ஒடிசா அணியை எதிர்த்து விளையாட உள்ளது

Leave a Response