பெப்சி தொழிலாளர் பிரச்சனை எதிரொலி; புதிய டெக்னீசியன் யூனியன் துவக்கம்!

1N0A4796

தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதிதாக டெக்னீசியன் யூனியன் ஒன்றை துவங்கியுள்ளனர்.மதுரையில் நடந்த பில்லா பாண்டி ஷூட்டிங்கின் போது பெப்சியில் ஒரு அங்கமாக இருந்த டெக்னீசியன் யூனியன் செய்த பிரச்னையால் பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே மோதல் உருவானது. தயாரிப்பாளர்கள், பெப்சி அல்லாத தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி கொள்ளலாம் என அறிவித்தது தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்கு பெப்சி எதிர்ப்பு தெரிவிக்க சில நாட்கள் வேலை நிறுத்த போராட்டமும் நடந்தது. பின்னர் பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் பேசி ஒரு சுமூக முடிவு எடுத்தது. அதோடு பெப்சியிலிருந்து டெக்னீசியன் யூனியன் நிரந்தரமாக நீக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் திரைப்படத்யாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதிதாக ஒரு டெக்னீசியன் யூனியன் ஒன்றை துவங்கி உள்ளனர். இதில் ஏற்கனவே பெப்சியிலிருந்து விலகிய டெக்னீசியன் யூனினை சேர்ந்த உறுப்பினர்களும் இதில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை விஷால் மற்றும் அவுட்டோர் யூனிட் அசோசியனின் தலைவர் முத்துசாமி இணைந்து வழங்கினர். இதுப்பற்றி விஷால் பேசும்போது, புதிததாக துவங்கப்பட்டுள்ள டெக்னீசியன் யூனியன் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்களுக்கு என்ன குறைகள், என்ன பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கூறலாம். தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் எப்போதும் இருக்கும் என்றார்.

Leave a Response