ஏழை மக்களுக்கு மானிய விலை வீடுகள்; சித்தராமையா அதிரடி!!

siththa
கர்நாடகாவில் ஒரு லட்சம் ஏழைகளுக்கு மானிய விலையில் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சட்டமன்ற கட்டிட 60வது ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், நேற்று விதான் சவுதாவில் வீட்டு வசதித் துறை அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா:-

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள வீடில்லா மற்றும் வீட்டு மனையில்லா குடும்பங்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதியான பயனாளிகளிடம் இருந்த இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், அதை பரிசீலித்து தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கூறினார்.

இதற்கான விண்ணபங்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 15ந்தேதி முதல் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

1 லட்சம் வீடு கட்டுவதற்காக சுமார் 1,100 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும், தற்போது 431 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இடங்கள் கண்டறிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த இடங்கள் குறித்து பரிசீலனை செய்து வீடுகளை கட்ட ராஜீவ் காந்தி வீட்டு வசதிக் கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டப்பட இருக்கும் 80 சதவிகித வீடுகளில் மற்றும் பெங்களூரு எல்லைக்குள்பட்டோருக்கு 20 சத வீடுகள் ஒதுக்கப்படும். மேலும், பெங்களூரில் குறைந்தது ஐந்தாண்டுகள் வசித்துள்ளோருக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்படும்.

வீடுகளைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்பணமாக ரூ.50 ஆயிரமும், பிற வகுப்பினர் ரூ.1 லட்சமும் செலுத்த வேண்டியிருக்கும். மீதமுள்ள பணத்தை வங்கிகள் மூலம் கடனாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா ( நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்) திட்டத்தின்படி ஏழை பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசுக்கு போட்டியா கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Response