குடிமக்களைப் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கிவிடக் கூடாது- மத்திய உணவுத்துறை!

resan

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லை என்ற காரணத்தால் ஒரு குடும்பத்துக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படவில்லை. இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்தார். இந்த பட்டினிச் சாவு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதார் இல்லை என்ற காரணத்துக்காக ரேஷன் பெறுவதற்கு தகுதியுள்ள குடிமக்களைப் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கிவிடக் கூடாது’ என்றும் மத்திய உணவுத் துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

smart

அதே நேரத்தில் ஆதார் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளை முறையாகப் பரிசீலித்து, அவர்கள் உண்மையான பயனாளிகள்தானா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் . அவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்களுக்கான கணக்கை தனிப் புத்தகத்தில் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முறைகேடுகள் நடைபெறாத வகையில் பொது விநியோகத் துறை உயரதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படாத நிலையில் இருந்தால் ரேஷன் கார்டுடன், ஆதார் அட்டையையும் சேர்த்து பரிசீலித்து பொருள்களை வழங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க இந்த ஆண்டு இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Response