செப்டம்பரில் ஜிஎஸ்டி ரூ.92,150 கோடி வசூல்! நிதியமைச்சகம் அறிவிப்பு

 

x25-1508910160-jaitley667.jpg.pagespeed.ic_.6dEu967uDm

பொதுத்துறை வங்கிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அதில், ரூ.1,35,00 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் மூலமாகவும், ரூ.76,000 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மூலமும் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் 83,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 14.2 கோடி மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எல்லாமே குஜராத், இமாசல பிரதேச மாநில சட்டசபை தேர்தலை கவனித்தில் கொண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 24ஆம் தேதியில் நடந்தது. அக்கூட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம், வங்கித் துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

05-1504597449-financeministry

கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.92,150 கோடி வசூலாகியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் – 3பி படிவத்தை 42.91 லட்சம் வணிகர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.92,150 கோடி வசூலாகியுள்ளது. இவற்றில் ரூ.14,042 கோடி மத்திய ஜிஎஸ்டி. ரூ.21,172 கோடி மாநில ஜிஎஸ்டி. மாநிலங்களுக்கு இடையிலான ஜிஎஸ்டி வசூல் ரூ.48,948 கோடி. இதில் ரூ.23,951 கோடி இறக்குமதி மூலம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, இழப்பீட்டு செஸ் வசூலிக்கப்படுகிறது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.7,988  கோடி. இதில் ரூ.722 கோடி இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஜூலையில், ரூ.95,000 கோடியாகவும், ஆகஸ்ட்டில் ரூ.91,000 கோடியாகவும் இருந்தது.

GST

 

தாமத ரிட்டர்னுக்கு அபராதம் கிடையாது:

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் வணிகர்கள், அவற்றை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் இது கணக்கிடப்படுகிறது. புதிய வரி முறையில் வணிகர்கள் பலரிடம் குழப்பம் நீடித்த  நிலையில், அபராத போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் – 3பி படிவம் தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், இது ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தாமதத்துக்கான அபராதமாக இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்துக்கான கணக்கு தாக்கலாக 55.87 லட்சம் படிவங்களும், ஆகஸ்ட் மாதத்துக்கு 51.37 லட்சம் படிவங்களும், செப்டம்பர் மாதத்துக்கு சுமார் 42 லட்சம் படிவங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஜூலையில் 33.98 லட்சம் கணக்குகள், ஆகஸ்ட்டில் 28.46 லட்சம் கணக்குகள் மட்டுமே குறித்த காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

Leave a Response