காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா ?: ராகுல் காந்தியுடன் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் சந்திப்பு!

 

குஜராத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியுடன் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேல் சந்தித்து பேசியதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

201710231524219016_Gujarat-election-Hardik-Patel-meets-Rahul-Gandhi-in_SECVPF

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கான தேர்தல் ஒரே நாளில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இமாச்சலப் பிரதேசத்துக்கு மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்டுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

குஜராத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்காகவே தேர்தல் தேதி தாமதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரசுடன் ஆம் ஆத்மியும் மல்லுக்கட்டுகிறது. இம்மாநிலத்தில் முதல் முறையாக மும்முனை போட்டி நிலவுகிறது.

1484634539-2087
மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா மல்லுகட்டி வருகிறது. காங்கிரஸ் தரப்பில் பி.ஜே.பி-க்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் குஜராத் மாநிலத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் பட்டேல் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் ஹர்திக் பட்டேல், பி.ஜே.பி-க்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்வது என்று முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரஸ் சின்னத்தில் தேர்தலில் நிற்கக் கூடும் என்று தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்துள்ள ஹர்திக், பி.ஜே.பி-க்கு எதிரான வாக்குகள் பிரியக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. அதே நேரத்தில் பி.ஜே.பிக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார். எனவே, காங்கிரஸ் ஓரளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறது. முதல் கட்டமாக கோத்ராவில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் ஹர்த்திக், பி.ஜே.பிக்கு எதிரான தமது பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

தலித் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான ஜிக்னேஸ் மேவானி என்பவரையும், இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அல்பேஸ் தாக்கூர் என்பவரையும் காங்கிரஸ் கட்சி வளைத்துப் போட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடஉள்ளனர்

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று குஜராத் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஒரு நாளுக்கு முன்புதான்  பிரதமர் நரேந்திர மோடி குஜராத்  வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

இன்று அகமதாபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து பட்டேல் இன தலைவர்  தலைவர் ஹர்திக்  பட்டேல் ராகுல் காந்தியை சந்தித்து உள்ளார்

 

Leave a Response