டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஊழல்; பிளீச்சிங் பவுடருக்குப் பதிலாக கோலமாவு!

images (1)

 டெங்கு பாதிப்பு தமிழகம் கோரத்தாண்டவமாடுகிறது. தமிழகத்தில் (அக். 9ம் தேதி வரை) 11,744 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும்  அரசு தரப்பே சொல்லும் அளவிற்கு நிலைமை உள்ளது.

டெங்குவை கட்டுபடுத்த தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்ச்சல் குறைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதை முழுவதுமாக குறைக்கும் பணியில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை முகப்பேர் கிழக்கில் பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக மாநகராட்சி ஊழியர்கள் கோலமாவை தெளித்துள்ளனர். பிளீச்சிங் பவுடர் என்ற பெயரில் தெருக்களில் கோலமாவை தெளித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஊழல் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இப்படித்தான் டெங்குவைக் கட்டுபடுத்தும் தீவிரப்பணி மேற்கொள்ளப்படுகிறதோ என்னவோ?

Leave a Response