தேங்காய் லட்டு ரெசிபி !

 

maxresdefault (2)

தேங்காய் லட்டு ரெசிபி : சுண்டக் காய்ச்சிய பாலுடன் நாரியல் லட்டு

தேங்காய் லட்டு ரெசிபி இந்தியர்களால் பல விழாக்களின் போதும், வீட்டின் சுப நிகழ்ச்சிகளின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த லட்டு உலர்ந்த தேங்காய் துருவல் மற்றும் சுண்டக் காய்ச்சிய பால் கொண்டு செய்யப்படுகிறது. இது மிகவும் சுவையான ருசி மிகுந்த நட்ஸூடன் கூடிய நறுமணத்தை தருகிறது.
இந்த நாரியல் லட்டுவின் லட்டு மற்றும் அதன் ஜூஸ் எத்தனை தடவை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் ருசிக்க தூண்டும் சுவை மிகுந்தது. வாயில் போட்டால் அப்படியே கரையும் இனிப்பாக உள்ளது. முதன் முதலில் செய்பவர்களுக்கு மிகவும் எளிதாகவும் விரைவில் செய்யக் கூடியதாகவும் உள்ளது. இது கண்டிப்பாக உங்கள் இனிப்பு பசியை தீர்த்து வைக்கும்.
சரி, நீங்கள் இந்த தேங்காய் லட்டை எப்படி செய்வது என்ற செய்முறை விளக்கத்தை  பின்வருமாறு காணலாம்.

தேங்காய் லட்டு ரெசிபி-யின் படிப்படியான செய்முறை ;
1. அடுப்பில் கடாயை வைத்து சூடான பிறகு சுண்டக் காய்ச்சிய பாலை ஊற்றி உடனே வறுத்த தேங்காய் துருவலையும் போட்டு கலக்க வேண்டும்.
2. நன்றாக கலந்து கொண்டே கலவையானது கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளர வேண்டும். கடாயில் ஒட்ட விடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
3. நன்றாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம் பருப்புகளை போட்டு கிளற வேண்டும்.
4. இப்பொழுது இந்த தேங்காய் கலவையை நல்லா வட்ட வடிவ பந்து மாதிரி உருட்ட வேண்டும்.
5. இந்த பந்தை உலர்ந்த தேங்காய் துருவலில் எல்லா பக்கங்களிலும் படும் படி பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
6. பிறகு பாதாம் பருப்பை மேல் தூவி அலங்கரிக்க வேண்டும்.

அதன்பிறகு சுவையான தேங்காய் லட்டு ரெசிபி தாயார்.

Leave a Response