ஆப்பிளுக்கு ஆப்பு ; மத்திய அரசு அதிரடி!

 

applelogo2

 

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் ஐபோன் தயாரித்து வருகிறது. இதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சலுகை வழங்கப்படவேண்டுமென ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அல்லாமல், இறக்குமதி செய்வதற்கு சலுகை தர முடியாது. ஸ்மார்ட்போன் மீதான கலால் வரி, இறக்குமதி வரிகள் ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தில் உற்பத்தி செய்வதை தவிர வேறு எதற்கும் பிரத்யேக சலுகை வழங்கும் திட்டமோ நோக்கமோ அரசிடம் இல்லை என்றார்.

Leave a Response