எல்லையில் மீண்டும் அட்டூழியம்; அத்துமீறிய பாக் .படைகள்!

இந்திய எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். 5 பேர் காயமடைந்தனர்.

போர்நிறுத்த ஒப்பந்த்தை மீறும் பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
201710021008009441_Boy-killed-5-injured-as-Pakistan-violates-ceasefire_SECVPF
அவ்வகையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். ஷாபூர், கிர்னி, குவாஸ்பா செக்டார்களில் எல்லையோர கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், கிர்னி செக்டாரில் 9 வயது சிறுவன் இஸ்ரர் அகமது உயிரிழந்தான். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் படையினர் எல்லையில் துப்பாக்கியால் சுட்டு தாக்குலைத் தொடங்கியதும் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதற்கிடையே, கிரண் செக்டாரில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். அதன்பின்னர், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

 

Leave a Response