பெங்களூரில் தொடர் மழை!

bangalore-rain3

பெங்களூருவில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள குடிசை பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், இரவு முழுவதும் மக்கள் தூக்கமிழந்து தவித்து வருகிறார்கள். பல இடங்களில் சாலைகளில் மரம் மற்றும் மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநகரின் ஓசூர்சாலை, ஓல்ட் மெட்ராஸ் சாலை, கனகபுரா சாலை, ஓல்ட் ஏர்போர்ட் சாலை, பல்லாரி சாலை, துமகூரு சாலை, சர்வதேச விமான நிலைய சாலை, நெலகங்லா, பெங்களூரு-மைசூரு நைஸ் ரோடு ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Response