அத்துமீறிய பாகிஸ்தான்; அடித்து விரட்டியது இந்தியா!

visit-kashmir
காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிம்பர் கேலி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது. இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் கூட ஒவ்வொரு முறையும் அத்துமீறுவதை பாகிஸ்தான் கொண்டுள்ளது.
எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் போதிலும் பாகிஸ்தான் ராணுவம் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது.

indian army
கடந்த சில தினங்களாகவே காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை பூஞ்ச் மற்றும் பிம்பர் கேலி ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். அதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இருநாட்டு ராணுவத்தினருக்கும் தொடர்ச்சியாக சண்டை நீடித்து வருகிறது.

indian army 2
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உற்பத்தி மையமாக இருப்பதாகவும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாகவும் ஐநாவில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Leave a Response