சென்னை உயர்நீதிமன்றத்தால் தப்பித்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்!

senthil

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக கூறி, 16 பேரிடம் ரூ.96 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்க, அவர் தங்கி இருந்த கர்நாடக மாநிலம், குடகு சொகுசு ரிசார்ட்டிற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்றனர்.

இந்தமோசடி புகார் தொடர்பாக கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி வரை கணக்கில் வராத பணம், சொத்து கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

Madras-High-Court

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டதையடுத்து, மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Senthil Balaji New_16475

பிற்பகலில் மனுவை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 3 ம் தேதி வரை செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையும் அக்டோபர் 3 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Response